தேசிய ஊட்டச்சத்து ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய ஊட்டச்சத்து ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

தேசிய ஊட்டச்சத்து ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

ஈரோடு

போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக சென்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது.

முன்னதாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்வாக தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை கலெக்டர் வழங்கினார்.


Related Tags :
Next Story