தேசிய நெல் திருவிழா


தேசிய நெல் திருவிழா
x

பாளையங்கோட்டையில் தேசிய நெல் திருவிழா நடைபெற்தது.

திருநெல்வேலி

17-வது தேசிய நெல் திருவிழா, இயற்கை வேளாண் விளை பொருள் வணிக திருவிழா மற்றும் பயிலரங்க கூட்டம் பாளையங்கோட்டை பள்ளியில் நேற்று நடைபெற்றது. கிரியேட் நமது நெல்லை காப்போம் தலைவர் துரைசிங்கம் தலைமை தாங்கினார்.

பொன்னம்பலம், அருட்தந்தை மை.பா.சேசுராஜ், நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொதுச் செயலாளர் கணபதி சுப்பிரமணியன், பாப்பாக்குடி செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வரவேற்றார்.

வேளாண்மை துறை இணை இயக்குனர் அசோக் குமார் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், இலவசமாக இயற்கை விதை நெல்களை வழங்கினார்.

விதைச்சான்று உதவி இயக்குனர் ரெனால்ட் ரமணி, டாக்டர் அருணாச்சலம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், நம்மாழ்வார் இயற்கை விவசாய சந்தை செயலாளர் சுப்பிரமணியன், இயற்கை விவசாயி பேராசிரியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள். முடிவில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துணை செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். இதில் இயற்கை விவசாயிகள், கல்லூரி மாணவ- மாணவிகள், நுகர்வோர் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story