தேசிய நெல் உணவு திருவிழா
கீழ்நகர் கிராமத்தில் தேசிய நெல் உணவு திருவிழா
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே கீழ்நகர் கிராமத்தில் உள்ள தனியார் விவசாய பண்ணையில் இன்று தேசிய நெல் உணவு திருவிழா நடைபெற்றது. நமது நெல்லை காப்போம் தலைவர் பி.துரைசிங்கம் தலைமை தாங்கினார்.
மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அன்பழகன், மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் எஸ்.மோகன், துரைமாமது, விண்ணமங்கலம் ரவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாய ஆலோசகர் கே.சி.பலராமன் வரவேற்று பேசினார்.
இதில் கலந்து கொண்ட இயற்கை விவசாயிகள் 350 பேருக்கு தமிழக பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, சீரக சம்பா நாட்டு பாசுமதி உள்பட பல்வேறு நெல் விதைகள் தலா 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் மகளிர் குழு பெண்கள் 150 பேருக்கு தமிழக பாரம்பரிய காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
விழாவில் இயற்கை விவசாயிகள் பிரகாஷ், கோவிந்தசாமி, அன்பழகன், செல்வராஜ், கீழ்நகர் ஊராட்சி தலைவர் தண்டபாணி, வேட்டவலம் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் கவியரசன் நன்றி கூறினார்.