தேசிய மக்கள் நீதிமன்றம்


தேசிய மக்கள் நீதிமன்றம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நந்தகுமார் மற்றும் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 5,316 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. இதில் 2,200 வழக்குகள் பேசி முடிக்கப்பட்டு மனுதாரர்களுக்கு ரூ. 12 கோடியே 55 லட்சத்து 23 ஆயிரத்து 449 நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் கோர்ட்டு ஊழியர்கள், போக்குவரத்து துறை மற்றும் அரசு மருத்துவ துறை, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story