தேசிய மக்கள் நீதிமன்றம்
அம்பையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக் அதலாத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார், குற்றவியல் நடுவர் பல்கலைசெல்வன் ஆகியோர் தலைமையில் ஒரு அமர்வும், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார் தலைமையில் ஒரு அமர்வுமாகவும் நடைபெற்றது. இதில் 326 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 58 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.1.12 கோடி தீர்வு காணப்பட்டது.
இதில் அரசு வக்கீல்கள் மீனாட்சி நாதன், காந்திமதி நாதன், திருமலை குமார், ராம்ராஜ் பாண்டியன், முன்னாள் அரசு வக்கீல்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், செல்வ அந்தோணி, முத்து விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story