தேசிய மக்கள் நீதிமன்றம்; 12-ந் தேதி நடக்கிறது


தேசிய மக்கள் நீதிமன்றம்; 12-ந் தேதி நடக்கிறது
x

தேசிய மக்கள் நீதிமன்றம் 12-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், வழக்கு நடத்துபவர்கள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஒரு அரிய வாய்ப்பாக அமைய உள்ளது. எனவே, பொதுமக்கள்-வழக்கு நடத்துபவர்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்து கொள்ளலாம். இது சம்பந்தமாக தினமும் சமரசப் பேச்சுவார்த்தை பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296206 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story