தேசிய அஞ்சலக வார விழா
அஞ்சல் துறை சார்பில் காரைக்குடி கோட்டத்தில் தேசிய அஞ்சலக வார விழா நடைபெறுகிறது
காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சலக வார விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நாளை 9-ந்தேதி முதல் தொடங்கி 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற 10-ந்தேதி நிதி வலுவூட்டல் தினமாகவும், 11-ந்தேதி தபால் தலை சேகரிப்பு தினமாகவும், 12-ந்தேதி அஞ்சலக ஆயுள்காப்பீடு தினம் மற்றும் தபால்கள் தினமாகவும், 13-ந்தேதி சாமானியர் நலவாழ்வு தினமாகவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பயனடையும் வகையில் மேற்கூறிய நாட்களில் காரைக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் புதிய சேமிப்பு கணக்குகள், செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கவும், அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேரவும், காலாவதியான பாலிசிகளை சலுகை தொகையில் புதுப்பிக்கவும், புதிய ஆதார் எடுத்தல் மற்றும் ஆதாரில் திருத்தம் செய்யவும், புதிய இந்தியாவிற்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டிகளை நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.