கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேசிய தர மதிப்பீடு; அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54 வது இடம்


கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேசிய தர மதிப்பீடு; அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54 வது இடம்
x

2022ஆம் ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி 54-வது இடம் பெற்றுள்ளது.

காரைக்குடி,

கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பேராசிரியர்களின் ஆய்வு வெளியீடுகள், பணி வாய்ப்பு மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் இந்திய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை தேசிய தர மதிப்பீட்டுக் குழு வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் இந்திய அளவில் 75-வது இடத்தை பெற்றிருந்த அழகப்பா அரசு கலைக் கல்லூரி, 2022-ம் கல்வியாண்டில் பல இடங்கள் முன்னேறி 54-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கல்லூரியின் பவள விழா ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் கல்லூரிக்கு கிடைத்த இந்த தர மதிப்பீடு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது என கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி கூறினார். மேலும், இதற்காக உழைத்த பேராசிரியர்களையும், ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்களையும், மாணவர்களையும் முதல்வர் பாராட்டினார் .


Next Story