தேசிய அறிவியல் தின விழா
தேசிய அறிவியல் தின விழா நடந்தது
சிவகங்கை
காளையார்கோவில்
காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புலியடிதம்மம் அக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ரீனா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். ஆசிரியை ரமாதேவி வரவேற்றார்.. சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆசிரியை ராணி தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி கூற ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் ஆசிரியைகள் புஷ்பா, ராகவி மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை அமுதா ராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story