ம.தி.தா. இந்து கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


ம.தி.தா. இந்து கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
x

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி இயற்பியல் துறை சார்பாக 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி இயற்பியல் அறிவியலில் சமீபத்திய ஆய்வு என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடந்தது. துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்லூரி கல்வி சங்க பொருளாளர் சிதம்பரம் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். கல்வி சங்க உறுப்பினர் தளவாய் மற்றும் திருமலையப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் சேகர், பேராசிரியர் பெத்தனசாமி மற்றும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி பேராசிரியை குருவம்மாள் நன்றி கூறினார்.

1 More update

Next Story