தேசிய கருத்தரங்கம்
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் 'நாட்டுப்புற இலக்கியங்களில் மானுட மேம்பாட்டு சிந்தனைகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம், 'திருமறை நாடகங்கள்' என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா, உலக தாய்மொழி தின விழா நடந்தது. பேராசிரியை பிரபாவதி மேரிபாய் இறைவணக்கம் பாடினார். பேராசிரியை சாந்திபாய் பேசினார். கலைப்புல முதன்மையர் முனைவர் தேவநேசம் மேபல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் உஷா காட்வின் தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரபாண்டியன் ேபசினார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் செல்லபெருமாள் கலந்து கொண்டு பேசினார். இதில் முனைவர்கள் ஹெலன் சோபியா, சந்திரபுஷ்பம், பீறிடா கன்ஷீலா, அலிஸ் ராணி மற்றும் செல்வஸ்ரீ, கிருபா வெள்ளையம்மாள், மேரி சுகிர்தா பாண்டியன், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story