தேசிய கருத்தரங்கு


தேசிய கருத்தரங்கு
x

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில், 'தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம்-2047' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.

விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்மரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. கருத்தரங்கில் ப பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story