தேசிய கருத்தரங்கம்
தேசிய கருத்தரங்கம் நடந்தது.
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'உள்ளூர் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கி பசுமை வணிக செயல்முறை பொருட்கள் நிர்வாகம் மற்றும் மேலாண்மை' குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார். பேராசிரியர் லாவண்யா வரவேற்று பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை துறைத்தலைவர் ரவி 'பசுமை வாழ்வின் தேவை' என்ற தலைப்பில் பேசினார். போபால் மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் சுச்சிஸ்ரீவஸ்தா, பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக இணை பேராசிரியர் வரலட்சுமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் துறை இணை பேராசிரியர் ராஜமன்னார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆய்வுச்சுருக்க புத்தகம் வெளியிடப்பட்டது. பேராசிரியர் சண்முகதங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா, கல்லூரி கல்வி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.