கல்லூரி கருத்தரங்கம்


கல்லூரி கருத்தரங்கம்
x

பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

திருப்போரூர்,

சென்னை ராஜீவ்காந்தி சாலை படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நுண்ணுயிரியல் துறை சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரியின் இயக்குநர் திருமதி. ஸ்ரீதேவி புகழேந்தி அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் ஜெ.பியூலா பத்மாவதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை இயக்குநர் டாக்டர் குமாரசாமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் டாக்டர் இளஞ்செழியன் மாணிக்கம், டாக்டர் அமுதவேணி, டாக்டர் அனுராதா மிஸ்ரா திரிபாதி, டாக்டர் விஜயராணி, டாக்டர் ஸ்டாலின் ராஜ், டாக்டர் லூக் எலிசபெத் அனா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கருத்தரங்க நிறைவு அமர்வில் டாக்டர் அனூப் ஆஸ்டின் மாணவர்களுக்குப் பரிசினை வழங்கி பாராட்டினார். இக்கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய சூழலில் உள்ள நோய் கிருமிகளைத் தவிர்க்கும் முறைகளை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.


Next Story