தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழு ஆய்வு
பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிங்கம்புணரி
பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவ சேவை வழங்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள் முழு பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ள காரணத்தால் பல கர்ப்பிணிகள் இந்த பகுதியில் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் 80-க்கும் மேற்பட்ட சதவீதம் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கிறது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரியின் இயற்கை, சுகாதாரமான சுற்றுச்சூழல், சிறந்த மருத்துவ பணியாளர்கள் போன்றவை உள்ளதாக அப்பகுதி பெண்கள் கூறி வருகிறார்கள்.
ஆய்வு
இந்நிலையில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்குவதற்கான தேசிய தரச்சான்று ஆய்வு நிபுணர் குழுவினர், தேசிய திறனாய்வு தரச் சான்று ஆய்வு குழுவினர், நிபுணர்கள் பிரான்மலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் விஜய் சந்திரன் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலையில், மருத்துவ நிபுணர் குழுவை சேர்ந்த மணிஸ் மதன்லால் சர்மா மற்றும் டாக்டர் பிரசாந்த் சூரிய வன்சி, மண்டல தர ஆலோசகர் ஆனந்த், மண்டல தர மருத்துவ ஆலோசகர் கவுதம், மாவட்ட தர ஆலோசகர் லட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.