தேசிய மாணவர் படையினர் பேரணி
தேசிய மாணவர் படையினர் பேரணி
ராமேசுவரம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் எல்லையில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக கார்கில் தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கார்கில் வெற்றி தினமான நேற்று ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் வெற்றி தின பேரணி நடைபெற்றது. பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை ராமேசுவரம் கடற்கரை கமாண்டர் சஞ்சீவ்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது கோவிலின் நான்கு ரதவீதி வழியாக கடைத்தெரு, தனுஷ்கோடி சாலை, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயா கிரிஸ்டல்ராய், என்.சி.சி. ஆசிரியர் பழனிசாமி, காரைக்குடி என்.சி.சி. அவில்தார் இஸ்மாயில், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.