ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர தேசிய மாணவர் படை வீரர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்-அதிகாரி தகவல்


ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர தேசிய மாணவர் படை வீரர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்-அதிகாரி தகவல்
x

ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர தேசிய மாணவர் படை வீரர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்” என்று தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி தெரிவித்தார்.

திருநெல்வேலி

"ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர தேசிய மாணவர் படை வீரர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி தெரிவித்தார்,

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலர்கள் சந்திப்பு, மாணவர்களுக்கான சீருடை பணி வேலைவாய்ப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு 5-வது பட்டாலியன் சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு மாணவர்கள், அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ராணுவம், கப்பல் படை, விமானப்படையில் சேருவது தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழ்நாடு 5-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் பாபி ஜோசப், 3-வது பெண்கள் பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி தீபக்சிங், நெல்லை சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி சின்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய மாணவர் படை அலுவலர் செய்யது அலி பாதுஷா வரவேற்றார். மாணவி சிவசங்கரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி முதல்வர் அப்துல்காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுபைதார் மேஜர் சந்திராச்சாரி, சுபைதார்கள் ஜஹாங்கீர், சிவன்நாயக், ராவ், சதீஸ், அலுவலர் ரதிஸ்குமார் மற்றும் ராணுவ வீரர்கள் செய்திருந்தனர். மாணவி லத்தீபா தஸ்லீம் நன்றி கூறினார்.

அக்னி வீரர்கள் தேர்வு

பின்னர் அதுல்குமார் ரஸ்தோகி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று 'பி' மற்றும் 'சி' சான்றிதழ் பெறுகிற மாணவர்களுக்கு சீருடை பணி தேர்வில் சேருவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் திட்டத்தில் சேருவதற்கு தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அக்னிவீரர் திட்டத்தின் கீழ் தேர்வாகி உள்ள தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை இயக்குனரகம் மூலம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story