3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க தேசிய குழுவினர் ஆய்வு


3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க தேசிய குழுவினர் ஆய்வு
x

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க தகுதியானதாக உள்ளதா என தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க தகுதியானதாக உள்ளதா என தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ரூ.345 கோடியில் திறக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கும் இந்த கல்லூரியில் தனித்தளத்தில் அவர்களுக்கான பேராசிரியர்கள் மூலம் பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவ கல்லூரி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முழு கட்டமைப்புகள், ஆஸ்பத்திரி வசதிகள் தொடர்பான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 90 சதவீதம் அளவில் பணிகள் முடிவடைந்து உள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் 850 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைத்தளம் மற்றும் 5 மாடி கட்டிடத்தில் 500 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1,350 உள்நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும்.

குழுவினர் ஆய்வு

தற்போது முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுதவிர வரும் கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் 3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க மருத்துவ கல்லூரி தயாராக உள்ளதா, அதற்கான கட்டமைப்புகள் கல்லூரியிலும், மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியிலும் உள்ளதா என ஆய்வு செய்ய குழு வரும் என கூறப்பட்டது. இதன்படி நேற்று காலை தேசிய மருத்துவ கவுன்சில் குழுவை சேர்ந்த 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு திடீரென்று வந்தனர். இவர்கள் கட்டிடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று கட்டமைப்புகள் முழுமையாக உள்ளதா, வகுப்புகள் மற்றும் செயல்முறை வகுப்புகளுக்கு தயாராக உள்ளதா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். இவர்கள் இந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை அளித்து அதன்பின்னர் 3-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.


Related Tags :
Next Story