திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய காச நோய் விழிப்புணர்வு பேரணி


திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய காச நோய் விழிப்புணர்வு பேரணி
x

தேசிய காசநோய் ஒழிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கலந்து கொண்ட நடை பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர்

காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காச நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டதையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய காசநோய் ஒழிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கலந்து கொண்ட நடை பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது:-

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் நமது திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோயின் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. ''காசநோய் இல்லாத இந்தியா மற்றும் தமிழகம் 2025'' என்ற இலக்கினை நோக்கி நம் மாவட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அறிகுறி உள்ள நபர்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்த விழிப்புணர்வு பேரணியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story