தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்


தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
x

பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை பேட்டையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் 10-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. இந்த முகாமில் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு நெல்லை பேட்டை அரசு ஐ.டி.ஐ. வளாகத்திற்கு எதிரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04622 342432, 9499055790 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.


Next Story