தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் வருவாய் துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இதற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கி வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த அவர் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் வருவாய்துறை அலுவலர், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story