தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி


தேசிய வாக்காளர் தின  விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:53+05:30)

தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

தென்காசியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு தொடங்கிய இந்த பேரணிக்கு தென்காசி உதவி கலெக்டர் கங்கா தேவி தலைமை தாங்கினார். தாசில்தார் ஆதிநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், செஞ்சிலுவை சங்க நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணி தெற்கு ரத வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. முடிவில் செஞ்சிலுவை சங்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story