தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
x

நெல்லையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, 'வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வாசகத்தை முன்னிறுத்தி இந்த ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வாக்களிப்பது உரிமை என்பது தொடர்பான விழிப்புணர்வு கோலப்போட்டியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பலவிதமான ரங்கோலி கோலங்களை வரைந்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்தபிரகாஷ், மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, கணபதி சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையங்கோட்டையை சென்றடைந்தது. பேரணியின்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story