நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே கொங்கம்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் நடத்தினர்

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே கொங்கம்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் நடத்தினர். துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ் துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் இளையான்குடி அரவிந்த் ரிசிஸ், வட்டார மருத்துவர் அருண் அரவிந்த், வணிகவியல் துறை தலைவர் நைனா முகமது, பாரத ஸ்டேட் பேங்க் வங்கி துணை மேலாளர் பாலமுருகன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி, வணிகவியல் உதவி பேராசிரியர் நாசர், அரசு மருத்துவமனை மருத்துவர் நோம்பரசன், ஆய்வுக்கூட பிரிவு ரஞ்சித் குமார், தாசில்தார் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் கொங்கம்பட்டி ஊராட்சி தலைவி சரண்யா பிரசாத், சங்கரா கண் மருத்துவமனை கண் மருத்துவர் ரிஷிகேஷ், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, மாவட்ட ரத்ததான குழுமம் முகமது யூசுப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பீர்முகம்மது, அப்ரோஸ் சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story