திமிரி அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


திமிரி அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
x

மழையூரில் திமிரி அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த மழையூர் கிராமத்தில் திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழையூர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொண்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர் தலைமை தாங்கினார். மழையூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரணி முன்னிலை வகித்தார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவசங்கரன், உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் கோபிநாத் மேற்பார்வையில் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கும் மக்களுக்கும் வாழ்வியல் குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது. முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story