தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்தது


தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்தது
x

தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயிகள் இருப்பு வைத்திருந்த பஞ்சு தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலையில் விலை குறைந்து உள்ளது.

விருதுநகர்

தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயிகள் இருப்பு வைத்திருந்த பஞ்சு தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலையில் விலை குறைந்து உள்ளது.

விலை குறைந்தது

பஞ்சு குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டால் ரூ.6,280 ஆக உள்ள நிலையில் குவிண்டால் ரூ.8 ஆயிரத்துக்கு கூட விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டிய நிலையில் தற்போது விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் நூற்பு மற்றும் ஜவுளி ஆலைகளில் பஞ்சுதேவை குறைவாக உள்ள நிலையில் விற்பனைக்கு தினசரி ஒரு லட்சம் பேல்கள் வரும் நிலையில் விலை குறைய தொடங்கியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கண்டிபஞ்சு (356கிலோ) ரூ. 62 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ரூ. 56 ஆயிரத்து 800 ஆக குறைந்துள்ளது. மேலும் வரும் ஜூன் மாத விற்பனைக்கு கூட ரூ. 58,120 ஆக விலை சொல்லப்படுகிறது.

ஏற்றுமதி

மத்திய விவசாயத்துறை நடப்பு மாதத்தில் இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரம் பஞ்சு பேல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்றுமதி தேவையும் குறைந்துள்ளது. கடந்த 9 வருடங்களில் இல்லாத அளவு தற்போது 11.5 லட்சம் பேல்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்தது. ஆதலால் பஞ்சு விலை உடனடியாக உயர வாய்ப்பு இல்லை என்றே வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story