இயற்கை மரண உதவித்தொகை


இயற்கை மரண உதவித்தொகை
x

கணவனை இழந்த பெண்ணுக்கு இயற்கை மரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி தாலுகா, நாகவேடு கிராமத்தில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி உமா நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் இயற்கை மரண உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தார். அவரின் மனு பரிசீலிக்கபட்டு வருவாய் தீர்வாய அலுவலரும், சப்- கலெக்டருமான பாத்திமா இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார். இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், தலைமையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம், நாகவேடு கிராம நிர்வாக அலுவலர் சதிஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story