இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்


இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்
x

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

திருப்பூர்

தளி

நோயற்ற வாழ்வுக்கு இயற்ைக விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

இயற்கை விவசாயம்

உடுமலை பகுதியில் விவசாயம் பிரதானமாகும். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் சாகுபடி பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கிடையில் உற்பத்தியை பெருக்க ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் மண்ணின் செழிப்பு தன்மை குறைந்து விட்டது. விதை முதல் விளைச்சல் வரை பூச்சி மருந்து தெளிக்கப்படுவதால் உண்ணும் உணவும் விஷமாகி போனது. இதனால் புதிய புதிய நோய்கள் மனிதனை தாக்குகிறது. நாளுக்குநாள் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது.

வயல்களில் விவசாயத்தின் நண்பனான மண்புழு செத்து விட்டது. மண்ணும் மலடாகிப்போனது. தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதன் முதல் கட்டமாக ஏர் கலப்பையை கொண்டு நிலத்தை உழுது பண்படுத்த பணிகளும் நடைபெற்று வருகிறது. கால்நடை கழிவுகளை கொண்டு இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விரட்டிகள் தயாரிப்பிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

கோரிக்கை

அதற்கு முறையான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் இல்லாததால் இயற்கை விவசாயம் ஆங்காங்கே சிறு வட்டத்திற்குள் மட்டுமே நடைபெற்று வருகிறது.எனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-----------------

1 More update

Next Story