வேதாரண்யம் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க வேண்டும்


வேதாரண்யம் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேதாரண்யம் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேதாரண்யம் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 விசை படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் சென்ற 15 மீனவர்களை நடுக்கடலில் தாக்கி ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை மற்றும் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 8 மீனவர்கள் காயம் அடைந்து வேதாரண்யம், நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, கோடியக்காடு, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் கூட்டம் ஆறுகாட்டுத்துறையில் கிராம பஞ்சாயத்தார் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

நீரோட்டம் காரணமாக

கூட்டத்தில் தமிழக எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குவதும், பொருட்களை கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் அச்ச உணர்வோடு நாள்தோறும் மீன் பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வேதாரண்யம் கடல்பகுதிக்கு அருகில் இலங்கை இருப்பதால் நீரோட்டம் காரணமாக இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி செல்லும் நிலை ஏற்படுகிறது.

கடற்படை முகாம்

எனவே எல்லை பகுதியில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை முகாம் வேதாரண்யம் பகுதியில் அமைத்து நாள்தோறும் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்.

தொடர் தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிற்கு அரசு நிவராணம் வழங்க வேண்டும். தொடர் தாக்குதலை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story