புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா


புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
x

புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

திருப்பூர்

சேவூர்

சேவூர் அருகே முறியாண்டம்பாளையம், காமராஜ் நகரில் அமைந்துள்ளபுற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத் தலமாக பாடல் பெற்றதும், நடுச்சிதம்பரம் என போற்றத்தக்கதும், வாலியினால் பூஜிக்கப்பட்ட வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள ஊர் சேவூர். போற்றுதலுக்குரிய இந்த ஊரில் ஆயிரம் கண்ணுடைய தேவியாக, ஆதிபராசக்தி சொரூபமாக, நாகதேவதையாக வீற்றிருக்கும் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டிருந்தது. மேலும் வைஷ்ணவி தேவியின் அலங்காரத்தில் சிறுமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

---------------------


Next Story