சக்திவாராஹி அம்மன் கோவிலில் நவசண்டியாகம்


சக்திவாராஹி அம்மன் கோவிலில் நவசண்டியாகம்
x
திருப்பூர்


உடுமலையை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நேற்று நடைபெற்றது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக நேற்று முன்தினம் காலை கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, நவாயரி ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. 2-ம் நிகழ்வாக நேற்று காலை 9 மணியளவில் நவசண்டியாகம் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து சுமங்கலி, கன்னியா, வடுக பூஜையும், வஸோத்தாரை யாகம், பூர்ணாஹூதி நடைபெற்றது. கடுமையான தோஷம் உள்ளவர்கள், கிரக நிலை மாற்றம், தீய சக்திகளில் இருந்து விடுபட, பெயர் புகழ் வெற்றி அடைய, எதிரிகள் ஒழிந்து காரிய வெற்றி அடைய நவசண்டியாகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, துர்கா தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story