பரமக்குடி ரெயில் நிலையத்தில் நவாஸ்கனி எம்.பி.ஆய்வு
பரமக்குடி ெரயில் நிலையத்தில் நவாஸ்கனி எம்.பி. திடீரென ஆய்வு செய்தார்
பரமக்குடி,
பரமக்குடி ெரயில் நிலையத்தில் நவாஸ்கனி எம்.பி. திடீரென ஆய்வு செய்தார். அப்போது ெரயில் பயணிகளிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். ெரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ெரயில் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது பரமக்குடி வியாபாரிகள் சங்கம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் சரக்குகளை பாதுகாப்புடன் வைப்பதற்கு சரக்கு குடோன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனந்தகுமார், பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன், காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு காஜா நஜ்முதீன், முகமது இலியாஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.