கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நவாஸ்கனி எம்.பி. பங்கேற்பு
சாயல்குடியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நவாஸ்கனி எம்.பி. கலந்து கொண்டார்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அரண்மனை தெருவில் உள்ள கோகுலயாதவ சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோகுல யாதவ சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், வக்கீல் செல்ல பாண்டியன், வார்டு உறுப்பினர் மாணிக்கவள்ளி பால்பாண்டியன், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி சாயல்குடி இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுவர்-சிறுமியர் விளையாட்டு போட்டிகள், சிலம்பம், கோகோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சாயல்குடி அரண்மனை தெரு கோகுல யாதவ சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story