ஹஜ் பயணிகளுக்கு ெரயில்களில் சிறப்பு பெட்டிகள் ஒதுக்க வேண்டும்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சென்னை வரக்கூடிய பயணிகளுக்கு ெரயில்களில் சிறப்பு பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என தெற்கு ெரயில்வே பொது மேலாளரிடம் கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
பனைக்குளம்,

ஹஜ் பயணிகள்
இதுகுறித்து ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவருமான கே.நவாஸ்கனி தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சவுதி அரேபியாவிற்கு சென்று ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் பயணிகள் சென்னைக்கு பயணிக்க உள்ளனர். சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் ஹஜ் பயணத்தை தொடரும் பயணிகள், சென்னைக்கு வருவதற்கு ெரயில்களில் இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
மிக குறைவான நாட்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சிறப்பு பெட்டிகள்
எனவே, இதனை கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமம் இன்றி சென்னை வருவதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ெரயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்கி, அதில் ஹஜ் பயணிகள் பிரத்தியேகமாக இருக்கைகளை பெற உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.