நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழா


நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழா
x

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழாவை சீர்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் நேற்று நவராத்திரி இசை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் கலந்து கொண்டு இசை விழாவை தொடங்கி வைத்தார். அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனையை நிகழ்த்தினார். குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் அன்னை பாலா ஆத்மிக குடும்பங்கள் குடும்ப விருத்தி பூஜை செய்தனர்.

பின்பு சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரி கொலு திறக்கப்பட்டது. சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் ஜெயராஜ், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரமணா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பாலமோகி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இறுதியாக செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story