நாயக்கர் கால கல்தூண் கடத்தல்


நாயக்கர் கால கல்தூண் கடத்தல்
x

விழுப்புரம் அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்டது முட்டத்தூர் கிராமம். இங்கிருக்கும் பருத்திப்பட்டு எனும் மலை அடிவாரத்தில் சுமார் 33 அடி உயரமுள்ள 9 கல்தூண்கள் இருக்கின்றன. இவை செஞ்சியை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தை (கி.பி. 15-16-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும்.

இந்நிலையில் நேற்று மாலை மேற்கண்ட தூண்களில் ஒன்று திடீரென மாயமானது. லாரியில் யாரோ ரகசியமாக கடத்திச்சென்று விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசில் புகார்

இதனை தொடர்ந்து முட்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா அர்ச்சுனன், கிராம நிர்வாக அலுவலர் அன்புக்கரசு, கல்யாணம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதில், ஒரு கனரக லாரியில் பழமைவாய்ந்த கல்தூண் கடத்தப்பட்டு இருப்பதாகவும் இதனை மீட்டுத்தரும்படியும் கூறியிருந்தனர். புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட கஞ்சனூர் போலீசார், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பழமைவாய்ந்த கல்தூண் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story