கழிவுநீர் ஓடைகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு


கழிவுநீர் ஓடைகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
x

நெல்லையில் கழிவுநீர் ஓடைகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறுகின்ற சாலைகளில் வசதிகள் எப்படி உள்ளது? என்பது குறித்தும், நெல்லை டவுன் பகுதியில் வாகையடிமுனை திருப்பணிமுக்கு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் ஓடைகளில் கழிவுநீர் அதிக அளவில் தேங்கி பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் உலகநாதன், முன்னாள் கவுன்சிலர் டி.எஸ்.முருகன், பா.ஜனதா நிர்வாகிகள் வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி, கணேசமூர்த்தி முத்துபலவேசம், முருகதாஸ், முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது சம்பந்தமாக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.


Next Story