நாசரேத் பிரகாசபுரம்பரிசுத்த பரலோக மாதாஆலய திருவிழா கொடியேற்றம்


நாசரேத் பிரகாசபுரம்பரிசுத்த பரலோக மாதாஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதாஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று மாலையில் கொடி பவனி, கொடியேற்றம், மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் புனித பனிமய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர், முதல்வர் எஸ்.கே.மணி, சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால்ரோமன், பிரகாசபுரம் சி.எஸ்.ஐ தூய. திரித்துவ ஆலய சேகர தலைவர் நவராஜ் ஆகியோர் முன்னிலையில் மன்னார்புரம் பங்குத் தந்தை எட்வர்ட்ஜே அடிகளார் கொடிமரத்தையும், புனித கொடியையும் அர்ச்சித்து ஏற்றி வைத்தார். விழா நாட்களில் காலையில் ஜெபமாலையும், திருப்பலியும், மாலையில் ஜெப மாலை, மறையுறை, நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

ஒன்பதாம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு சவேரியார்புரம் பங்குத் தந்தை ரெமிஜூயூஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை, திருவிழா மாலை ஆராதனை மறை மாவட்ட முதன்மைகுரு பன்னீர் செல்வம் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு, பாட்டக்கரை தூய. இம்மானுவேல் ஆலய சேகர தலைவர் ஜெபஸ் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.


Next Story