வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்
x

மழையால் பாதிக்கப்பட்ட எள், பயறு பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

மழையால் பாதிக்கப்பட்ட எள், பயறு பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் வட்டார விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார விவசாய சங்க தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன், விவசாய சங்கத்தை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கணேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீாமானங்கள் வருமாறு:-

காத்திருப்பு போராட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் பருவம் தவறிய பெய்த மழையால் பாதிக்கப்பட்ட எள், பயறு, உளுந்து பயிர்களை கணக்கெடுத்து இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வேதாரண்யம் ஒன்றியத்தில் நெல், பயறு, உளுந்து பயிர்கள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாமலும், விவசாயிகளின் கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்காமலும் உள்ளதை கண்டித்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது.

இந்த போராட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களும், விவசாய பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. முடிவில் விவசாய சங்க நிர்வாகி தாயுமானவன் நன்றி கூறினார்.

Next Story