பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது


பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

திசையன்விளை அருகே, மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 8-ந் தேதி இரவு நிறுத்தி இருந்த தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா (வயது 20), லிங்கேஸ்வரன் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உவரி அருகே உள்ள சூடுஉயர்ந்தான்விளைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (28) என்பவரை உவரி போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story