ஆனைமலை அருகே வாகனம் மோதி முதியவர் பலி


ஆனைமலை அருகே வாகனம் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே வாகனம் மோதி முதியவர் பலி

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 73). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் காய்கறிகளை வாங்குவதற்காக தினசரி பொள்ளாச்சி மார்க்கெட்டுகளுக்கு சென்று காய்கறி வாங்கி வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் காய்கறி வாங்குவதற்காக பொள்ளாச்சி அருகில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணியன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story