அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கிருஷ்ணாபுரம். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர்- பர்கூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகிக்க கோரி அங்குள்ள ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், 'உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து 11 மணி அளவில் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story