ஆண்டிப்பட்டி அருகே மின்வயரை திருடிய 3 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே மின்வயரை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி ஊராட்சி செயலர் முத்துக்குமார். இவர், அதே கிராமத்தில் எம்.கே.டி. நகரில் ஆழ்துளை கிணற்றில் உள்ள பழுதான மின்மோட்டாரை சரிசெய்வதற்காக எடுத்து கொண்டு ஆண்டிப்பட்டி நகருக்கு வந்தார். ஆனால் சுமார் 130 மீட்டர் நீளமுள்ள மின் வயரை ஆழ்துளை கிணறு பக்கத்திலேயே வைத்துவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது மின்வயரை காணவில்லை.
இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்வயரை திருடியது அதே கிராமத்தை சேர்ந்த வீரக்குமார், சிலம்பரசன், ராம்பாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story