ஆண்டிப்பட்டி அருகேநிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு


ஆண்டிப்பட்டி அருகேநிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தாளாளர் திருப்பா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெகதீஸ்வரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நீர் மேலாண்மை துறை மதுரை கூடுதல் உதவி இயக்குனர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரை பாதுகாப்பது, அதன் அத்தியாவசியம் குறித்து விளக்கி பேசினார்.

உலகில் நூறு சதவீதத்தில் 3 சதவீதம் மட்டுமே சுத்தமான குடிநீராக உள்ளது. அந்த குடிநீர் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து வருகிறது. எனவே தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்கள் போன்றவற்றில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். மழை நீரை சிக்கனமாக பயன்படுத்தி வீணாகாதவாறு நிலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. நீர் மேலாண்மை துறை அலுவலர்கள் விசாலாட்சி, கோவிந்தராஜ் ஆகியோர் நடமாடும் நீர் ஆய்வக வாகனத்தில் உள்ள எந்திரங்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும் நீர் மேலாண்மை பற்றிய ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுகன்யா, பானுப்பிரியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story