ஆசனூர் அருகே தோட்டத்தில் சுற்றி திரிந்த 2 யானைகள் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்


ஆசனூர் அருகே  தோட்டத்தில் சுற்றி திரிந்த 2 யானைகள்  வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்
x

தோட்டத்தில் சுற்றி திரிந்த 2 யானைகள்

ஈரோடு

தாளவாடி அருகே உள்ள ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 9 மணி அளவில் 2 யானைகள் வெளியேறின. பின்னர் அருகே உள்ள ஒரு தரிசு நிலத்துக்குள் புகுந்தன. அதன்பின்னர் 2 யானைகள் தோட்டத்துக்குள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

உடனே இதுபற்றி ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் சத்தம் போட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டு்ம் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

வழக்கமாக இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானைகள் நேற்று பகல் நேரத்தில் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.


Next Story