பவானிசாகர் அணை அருகே தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர்


பவானிசாகர் அணை அருகே   தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு   கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 16 Dec 2022 7:30 PM GMT (Updated: 16 Dec 2022 7:30 PM GMT)

கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு

ஈரோடு

சத்தியமங்கலம் தாலுகா பவானிசாகர் அணை அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம், பனையம்பள்ளி, குரும்பபாளையம் ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு அந்த பகுதி விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு நேற்று கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்.டி.ஓ. திவ்யதர்ஷினியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

பவானிசாகர் அணை அருகே உள்ள பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு 1,084 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் தொழிற்பேட்டை அமைவதால் பவானி ஆற்றில் தண்ணீர் மாசு ஏற்படும். எனவே பவானிசாகர் அணை அருகே தொழிற்பேட்டை அமைக்க உள்ள அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இங்கு தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.Next Story