போடி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தம்பதி படுகாயம்
போடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தம்பதி படுகாயம் அடைந்தார்.
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). இவரது மனைவி ஜெயந்தி (56). நேற்று முன்தினம் தம்பதி இருவரும் போடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சில்லமரத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். போடி-தேவாரம் சாலையில் போடியை அடுத்த ரெங்கநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் ே்சர்த்தனர். இதுகுறித்து பழனியப்பன், போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சின்னமனூரை சேர்ந்த அலாவுதீன் (20) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.