போடி அருகே சாக்பீஸ் கம்பெனிக்குள் புகுந்த பாம்புகள்


போடி அருகே  சாக்பீஸ் கம்பெனிக்குள் புகுந்த பாம்புகள்
x

போடி அருகே சாக்பீஸ் கம்பெனிக்குள் பாம்புகள் புகுந்தன.

தேனி

போடி அருகே எறும்பு சாக்பீஸ் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை 2 பாம்புகள் புகுந்தன. இதை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடு்க்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி கம்பெனிக்குள் பதுங்கி இருந்த பாம்புகளை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டவை 5 அடி நீளமுள்ள நரிமூக்கு வகையை சேர்ந்த பாம்புகள் ஆகும். பின்னர் அந்த பாம்புகளை வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்டது அரிய வகை பாம்புகள் என்று தீயணைப்பு நிலைய அலுவலர் கூறினார்.


Related Tags :
Next Story