சென்னிமலை அருகேகிணற்றுக்குள் விழுந்த தொழிலாளி


சென்னிமலை அருகேகிணற்றுக்குள் விழுந்த தொழிலாளி
x

தொழிலாளி

ஈரோடு


சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் ஓட்டப்பாறை ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் 80 அடி ஆழத்தில் பொது கிணறு ஒன்று இருக்கிறது. இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.மேலப்பாளையத்தை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி வெங்கடாசலம் (வயது 35) என்பவர் நேற்று மாலை 6 மணி அளவில் கிணற்று திண்ணையில் படுத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றார்கள்.

கிணற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்ததால் வெங்கடாசலம் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரின் உடலை மீட்பதற்கும் சிரமம் ஏற்பட்டது. கொக்கிகளை பயன்படுத்தி உடலை மீட்க முயற்சி செய்தனர். அப்போதும் முடியவில்லை. பின்னர் 3 மின் மோட்டார்கள் கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் மீட்பு பணியில் இடையூறு ஏற்படாமல் இருக்க சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தினார்கள்.

கிணற்றுக்குள் தவறி விழுந்த வெங்கடாசலத்தின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது அவருடைய தாய் தமிழரசி வீட்டில் வெங்கடாசலம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.


Next Story