சென்னிமலை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
சென்னிமலை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
ஈரோடு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சென்னிமலை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னிமலை அருகே அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.முகாமை ஈரோடு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜெயஸ்ரீ பார்வையிட்டு தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கோதைச்செல்வி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.டாக்டர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். 83 குழந்தைகள் உள்பட 117 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை சிகிச்சையாளர், வட்டார வளமைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story